வேலூர் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் என்ற இடத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ள கோவிந்தசேரி என்ற இடத்தில் சிறிய குன்றின்மீது இத்தலம் உள்ளது. வேலூரிலிருந்து சோளிங்கர் செல்லும் வழியில் காவேரிப்பாக்கம் உள்ளது.
இத்தலத்தில் முருகப்பெருமான் பிரம்மசாஸ்தாவாக ஒரு கையில் ருத்ராட்ச மாலையுடனும், மறுகையில் கமண்டலத்துடனும், வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார்.
நாமக்கல்லுக்கு அருகே உள்ள "நைனாமலை" என்ற மலையே ஞானமலை என்றும் சிலர் கூறுவர். |